பங்களாதேஷ் சிட்டாகோங் நகரத்திலுள்ள இரசாயன சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 30ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை இந்த சம்பவத்தில் 300ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
30 ஏக்கர் பரப்பளவில் உள்ள தனியார் கிடங்கில் சில ஹைட்ரஜன் பெராக்சைடு உள்ளிட்ட இரசாயனங்கள் இருந்துள்ளன.
இந்தக் கிடங்கில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததை அடுத்து பொலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வாகனங்களுடன் விரைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். அப்போது கிடங்கில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் தீயணைப்பு வீரர்கள் உள்பட சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன், 300 பேர் வரையிலானோர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களுக்கு இராணுவ கிளினிக்குகள் உள்பட உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படடு வருகின்றன.
குறித்தக் கிடங்கில் 600 பேர் பணியாற்றி வந்துள்ளதாகவும், அவர்களில் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.