யுக்ரைன் எல்லையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தமது இராணுவ வீரர்கள் முகாமிற்கு திரும்பி வருவதாக ரஷ்யா பொய் கூறுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
எல்லையில் இருந்த இராணுவ வீரர்கள் சிலர் முகாமிற்கு திரும்பியதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும், யுக்ரைன் எல்லைகளில் ரஷ்யா படைகளை தொடர்ந்தும் குவித்து வருவதாகவும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
இதனால் ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் யுக்ரைன் மீது போர் தொடுக்கலாம் என்றும், அதன்போது செயற்படுவதற்கு அமெரிக்கா தயாராகவே உள்ளது என்றும் அமெரிக்கா வெளியுறவு செயலாளர் கூறியுள்ளார்.
யுக்ரைன் எல்லையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர்கள் சிலர் முன்னர் இருந்த முகாமிற்கு திரும்புவதாக 15 ஆம் திகதி அறிவித்திருந்த ரஷ்யா, இராணுவ வீரர்கள் அங்கிருந்து யுத்த வாகனங்களுடன் திரும்பிச் செல்லும் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தது.
இந்நிலையிலேயே அதில் உண்மையில்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது.