சூடான் பிரதமர் அப்தல்லா ஹம்தோக் பதவி விலகியுள்ளார்.
கடந்த ஒக்டோபரில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதும் பதவி நீக்கப்பட்டு, பின்னர் அதிகாரப் பகிர்வு தொடர்பாக நடந்த பேச்சு வார்த்தைகளை தொடர்ந்து மீண்டும் பிரதமர் பதவியில் அப்தல்லா ஹம்தோக் அமர்த்தப்பட்டார்.
ஆனால், இராணுவத்தின் தலையீடு இல்லாமல் மீண்டும் முற்றிலும் குடிமக்களே இருக்கும் அரசு அமைய வேண்டும் சூடானில் மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் அப்தல்லா ஹம்தோக், பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
”நாடு பேரழிவை நோக்கிச் செல்வதைத் தடுக்க முயன்றேன்; ஆனால் அதைத் தன்னால் தடுக்க முடியவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தனது பதவி விலகல் தொடர்பில் தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றினார்.