இலங்கையின் கிழக்கு கடற்கரை பகுதியில் திங்கட்கிழமை அதிகாலை நில அதிர்வொன்று பதிவாகியுள்ளது.
மட்டக்களப்பில் இருந்து சுமார் 310 கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்கடல் பகுதியில், அதிகாலை 1.30 மணியளவில் இவ்வாறு நில அதிர்வு பதிவாகியுள்ளதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் 4.65 ஆக பதிவாகியுள்ளதாகவும் புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் இதனால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இருக்கவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.