
13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் குழுவினர் ஜனாதிபதியின் செயற்பாடுகளை எதிர்ப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
13ஆம் திருத்தம் தொடர்பில் தமிழ்க் கட்சிகளுடனும், சர்வ கட்சி பிரதிநிதிகளுடனும் கடந்த வாரங்களில் கலந்துரையாடியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் சபையில் யோசனையை முன்வைத்து உரையாற்றவுள்ளார்.
எனினும் இந்த விடயம் தொடர்பில் அதிருப்தியடைந்துள்ள பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அதற்கு எதிர்ப்பை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோத்தாபய ராஜபக்ஷவுக்கு 69 இலட்சம் மக்களால் வழங்கப்பட்ட ஆணையின் எஞ்சிய காலப்பகுதிக்காகவே ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்துள்ளோம் என்றும், இதனால் அவர் மக்கள் ஆணைகளை மீறிய தீர்மானங்களை எடுக்க முடியாது என்றும் பொதுஜன பெரமுனவின் அந்த குழுவினர் கட்சி தலைமைகளிடம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.