February 27, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வசந்த முதலிகே மீண்டும் கைது!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

2020 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது குழப்பம் ஏற்படுத்தியமை தொடர்பில் அவருக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த பிடியாணைக்கு அமைய அவர் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு பொரளை பிரதேசத்தில் கறுவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் நடத்தப்பட்ட போராட்டங்கள் தொடர்பில் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்த வசந்த முதலிகே 90 நாட்களின் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வெறு வழக்கொன்றில் கைது செய்யப்பட்டுள்ளார்.