November 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

5 இஸ்லாமிய அமைப்புகள் மீதான தடைகள் நீக்கம்!

இலங்கையில் பயங்­க­ர­வாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்­டத்­தின் கீழ் தடை செய்யப்பட்டிருந்த 5 இஸ்லாமிய அமைப்புகள் மீதான தடைகளை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜுலை 26 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த தடை நீக்கம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, தெளஹீத் அமைப்புக்களாக அறியப்படும், ஐக்­கிய தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (யூ.டி.ஜே.), சிலோன் தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (சி.டி.ஜே.), ஸ்ரீலங்கா தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (எஸ்.எல்.டி.ஜே.), அகில இலங்கை தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (ஏ.சி.டி.ஜே.), ஜம்­மி­யதுல் அன்­ஸாரி சுன்­னதுல் மொஹ­ம­தியா (ஜே.ஏ.எஸ்.எம்.) ஆகியவற்றின் மீதான தடைகள் தளர்த்தப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு அமைப்புகளுக்கு இலங்கையில் அரசாங்கம் தடை விதித்திருந்தது.

இதன்படி 2021 ஏப்ரல் 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2223/3 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.