ஜனவரி 30 மற்றும் 31ஆம் திகதிகளில் மின்வெட்டை அமுல்படுத்தாதிருக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதால் நீர் மின் உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் இரண்டு நாட்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்தாதிருக்க முடிவு செய்ததாக மின்சார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் நெருக்கடியால் தினசரி 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இன்று மாலை முதல் மின் வெட்டை இரண்டு நாட்களுக்கு நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உயர்தரப் பரீட்சை காலத்தில் மின்வெட்டை அமுல்படுத்தாதிருப்பது தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.