ரணில் விக்கிரமசிங்க இப்போது சரியான பாதைக்கு திரும்பிவிட்டார் என்று நம்புகிறோம். இதனால் நாங்கள் அவருக்கு ஆதரவளித்து பயணத்தைத் தொடர உதவுவோம் என்று முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ரணில் விக்கிரமசிங்கவுக்கு தேவையான உதவிகளை வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
“ஒன்றாக எழுவோம் – களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்” என்ற தொனிப் பொருளில் களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலக வளாகத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்திருந்த மக்கள்
சந்திப்பிலேயே மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த மக்கள் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது உரையாற்றிய மகிந்த ராஜபக்ஷ, நாட்டை முன்கொண்டு செல்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு தொடர்ந்தும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.