சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று முதல் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக கச்சா எண்ணெய் கப்பலுக்காக பணத்தை செலுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமையைக் கருத்திற்கொண்டே இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று விசேட அறிவித்தலொன்றை விடுத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடினாலும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களில் தட்டுப்பாடு ஏற்படாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.