
வர்த்தகர் தம்மிக்க பெரேரா அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று மாலை அவர், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவியேற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ எம்.பி பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து அவரின் பாராளுமன்ற ஆசனத்திற்கு தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து அவர் இன்று அமைச்சராக பதவியேற்றுள்ளார்.