இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலைமையில் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகளை ஒன்லைன் முறையில் முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சு ஆராய்ந்து வருகின்றது.
இது தொடர்பில் நாளைய தினத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினரும் கலந்துரையாடில் எவ்வாறு கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்று இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
எவ்வாறாயினும் திங்கள் முதல் இரண்டு வாரங்களுக்கு அரச ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதற்காக வழங்கப்பட்டுள்ள அனுமதியை பாடசாலை ஆசிரியர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அனைத்த மாணவர்களுக்கும் ஒன்லைன் முறையில் கற்பித்தல் என்பது சாத்தியமற்றது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை தற்போதைய நிலைமையில் எதிர்வரும் 2 அல்லது 3 வாரங்களுக்கு விடுமுறை வழங்கினால், மாணவர்களுக்கு ஆகஸ்ட், டிசம்பர் மாதங்களில் வழங்கப்படும் தவணை விடுமுறைகளை இரத்துச் செய்ய நேரிடலாம் என்றும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.