நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலைமையால் கல்வித் துறையினர் உள்ளிட்ட அரச ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி ஜுன் 20 ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களுக்கு இதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பான சுற்றுநிருபம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி வீட்டில் இருந்து ஒன்லைன் முறையில் அவர்கள் பணியாற்ற முடியும்.
அத்துடன் அலுவலகங்களுக்கு தேவையை அடிப்படையாகக் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களை அழைக்கவும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தூர பிரதேச பாடசாலை ஆசியர்களுக்கு அருகில் உள்ள பாடசாலைகளுக்கு சென்று பணியாற்றவும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதம் வரையில் அதற்கான அனுமதி வழங்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.