File Photo
கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் இந்நோய் பரவல் அதிகரித்துள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
காய்ச்சல், உடல்வலி, இருமல் மற்றும் சளி போன்றவை நோய்க்கான அடிப்படை அறிகுறிகளாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுவர்கள் மத்தியில் இந்நோய் எளிதில் பரவக்கூடியது. இதனால் இதுதொடர்பில் பெற்றோர் அவதானமாக இருக்க வேண்டும் என்று வைத்தியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், வகுப்பறைகள், மருத்துவமனைகள் மற்றும் பொது போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தும் போது முக கவசத்தை அணிவது மிக முக்கியமானது என்றும் வைத்தியர் தீபால் பெரேரா கூறியுள்ளார்.