நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையில் வெள்ளிக்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் தினேஸ் குணவர்தன, நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த யோசனையை முன்வைத்தார்.
இதன்படி அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமை எதிர்வரும் 3 மாதங்களுக்கு அரச ஊழியர்களுக்கு சுகாதாரம், கல்வி, போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த மற்றைய அரச நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
விபரங்கள் கீழ்வருமாறு