இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமெரிக்க இராஜாங்க செயலாளர் அந்தோனி பிளிங்கனுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
நேற்று மாலை இந்த உரையாடல் இடம்பெற்றது.
இதன்போது, சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளின் தற்போதைய நிலை குறித்து பிரதமர் விளக்கியுள்ளார்.
அமெரிக்காவுடன் நெருக்கமாகச் செயற்படுவதற்கும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் இலங்கை எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கும் இலங்கையில் முதலீட்டை ஊக்குவிப்பதற்கும் அந்தோனி பிளிங்கன் ஒப்புக்கொண்டார்.
இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமெரிக்க இராஜாங்க செயலாளர் அந்தோனி பிளின்கனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.