இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் மற்றும் சீனத் தூதுவர் கி சென்ஹொங் ஆகியோர் இன்று கொழும்பில் சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பின் போது இருவரும் இலங்கையின் அரசியல், பொருளாதார நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் ஸ்தீரத் தன்மையை ஏற்படுத்துவதற்காக இலங்கை முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவது தொடர்பிலேயே இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாக அமெரிக்கத் தூதுவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வர்த்தகம், முதலீடு மற்றும் அபிவிருத்தி போன்ற விடயங்கள் தொடர்பிலும் இந்த சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Met with PRC Ambassador Qi Zhenhong about the political and economic situation in SL. Interesting to share ideas about trade, investment, and development, as well as ways to support Sri Lankan efforts to ensure political stability & economic growth. pic.twitter.com/MM6GDhKV5F
— Ambassador Julie Chung (@USAmbSL) June 13, 2022