அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் கூடி ஆராயவுள்ளன.
தமிழ் கட்சிகள் அனைத்தும் நாளைய தினம் வீடியோ தொழில்நுட்பம் ஊடாக இந்த கலந்துரையாடலில் கலந்துகொள்ளவுள்ளன.
இதன்போது 21 ஆவது திருத்தம் தொடர்பாக கலந்துரையாடி தமது இறுதி நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளனர்.
இதேவேளை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் நாளைய தினம் கூடி புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் இறுதி முடிவெடுக்கவுள்ளன.
நாளைய தினம் மாலை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் 21 ஆவது திருத்த வரைபை சமர்ப்பித்து அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்வதற்கு நீதி அமைச்சர் எதிர்பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.