மெஸ்கோவில் இருந்து பயணிகள் எவரும் இன்றி வெறுமையாக வந்த ஏர்பஸ் A330-300 விமானம், கொழும்பில் இருந்த 275 ரஷ்ய பயணிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது.
‘ஏரோபிளொட்’ விமான சேவை நிறுவனம் மற்றும் அதனுடன் வர்த்தக நடவடிக்கைகளை தொடரும் நிறுவனத்திற்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அண்மையில் இலங்கை வந்த ரஷ்ய விமானமொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டது.
தமது விமானம் இலங்கை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டமைக்கு ரஷ்யா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், அது தொடர்பில் இலங்கைக்கான ரஷ்ய தூதுவரிடம் ரஷ்ய வெளிவிவகார அமைச்சு விளகத்தையும் கோரியது.
இதனிடையே குறித்த விமானத்தின் பயணிகள் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறான நிலைமையில் இந்த விடயம் தொடர்பில் ரஷ்யா மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், இன்றைய தினம் மொஸ்கோவில் இருந்து வெறுமையாக வந்த விமானமொன்று அந்தப் பணிகளை ஏற்றிக்கொண்டு ரஷ்யா பயணமாகியுள்ளது.