ஜுன் 6 ஆம் திகதி முதல் நாட்டில் பல இடங்களில் தனியார் பஸ் சேவைகள் இயங்காது என்று இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
டீசல் தட்டுப்பாடே இதற்கு காரணம் என்று அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மன்னார், வவுனியா, கம்பஹா மாவட்டங்களிலும் தென் மாகாணத்திலும் முற்றாக பஸ் சேவைகள் இயங்காது.
இதேவேளை கேகாலை, மாவனெல்ல, பொலனறுவை, பதுளை, புத்தளம் ஆகிய பிரதேசங்களிலும் பஸ் சேவைகள் இயங்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் ஜுன் 6 ஆம் திகதி முதல் 10 முதல் 15 வீதமான பஸ்களே சேவையில் ஈடுபடும் என்று கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.