நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டு நிலைமையில் அத்தியாவசிய சேவையை தவிர்ந்த ஏனைய அரச ஊழியர்கள் நாளை (20) பணிகளுக்கு செல்லவேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று விசேட அறிவித்தலை விடுத்தே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த வாரமளவில் எரிபொருள் நெருக்கடிக்கு ஓரளவுக்கு தீர்வு காண முடியுமாக இருக்கும். எனினும் நாளைய தினம் எரிபொருளை சேமிக்கும் வகையில் அத்தியாவசியமற்ற ஊழியர்களை பணிக்கு செல்ல வேண்டாம் என்று கேட்கின்றேன் என்றார்.
இதேவேளை, எரிபொருளைச் சேமிப்பதற்காக அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.