இந்த வருடத்திற்குள் இலங்கை பாரிய உணவுத் தட்டுப்பாட்டுக்கு முகம்கொடுக்க நேரிடலாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை இலங்கைக்கு மாத்திரமன்றி முழு உலகத்திற்கும் ஏற்படும் என்றும், இதற்கு முகம்கொடுப்பதற்காக உலக உணவுத் திட்டமும் அமெரிக்கா போன்ற நாடுகளும் தயாராகி வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ஏற்படக் கூடிய நிலைமை தடுப்பதற்காக நாட்டில் பயிர் செய்கைகளை ஊக்கப்படுத்த தேவையான முன்னெடுக்க வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட நகர பிரதேசங்களில் ஏற்படக் கூடிய நிலைமையை தடுப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்களை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
Video: https://fb.watch/d61aKhm1Im/