ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் எஸ்.சமரவிக்கிரம, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.
மே 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் போது உயிரிழந்த பொலனறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரலவின் ஆசனத்திற்கே எஸ்.சமரவிக்கிரம நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்ட சமரவிக்கிரம வாக்கு எண்ணிக்கையில் அந்தக் கட்சியில் 5 ஆம் இடத்தை பெற்று தோல்வியடைந்தார்.
இந்நிலையில் அமரகீர்த்தி அதுகோரல காலமானதை தொடர்ந்து அவருக்கு அடுத்ததாக அதிக வாக்குகளை பெற்றிருந்த சமரவிக்கிரமவுக்கு பாராளுமன்றம் செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.