November 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொலிஸ் தலைமையகத்தை முற்றுகையிட்டு ஜே.வி.பியினர் போராட்டம்!

ஜே.வி.பியின் இளைஞர் அணியினர் கொழும்பில் பொலிஸ் தலைமையகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மே 9 ஆம் திகதி காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யுமாறு வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

தாக்குதலுக்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் காரணமாக இருந்துள்ளனர் என்றும் அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தை பாதுகாக்கும் வகையில் செயற்பட்டவர்களை கைது செய்கின்ற போதும், அந்த ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யாது பொலிஸ்மா அதிபர் பார்த்துக்கொண்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் தமக்கு தீர்வு கிடைக்கும் வரையில் அங்கிருந்து செல்ல மாட்டோம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்தும் பொலிஸ் தலைமையகம் முன்னால் போராட்டம் நடத்தி வருகின்றனர்.