பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைக்கப்படும் அரசாங்கத்தை ஆதரிப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
எந்தவித பதவிகளையும் பெற்றுக்கொள்ளாது எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு அரசாங்கத்தை ஆதரிக்கவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாச தலைமையின் இன்று கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கிணங்க தற்போதைய அரசாங்கத்தினால் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ளப்படும் சிறப்பான வேலைத்திட்டங்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தமது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை பதவிகளை வழங்கி அரசாங்கதத்தின் பக்கம் இழுக்க முயற்சித்தால் அரசாங்கதத்தை ஆதரிக்கும் தீர்மானத்தை கைவிடுவோம் என்றும் அந்தக் கட்சி அறிவித்துள்ளது.