இலங்கை முழுவதும் மீண்டும் இன்று இரவு முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன்படி இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 வது பிரிவின் விதிமுறைகளுக்கு இணங்க ஜனாதிபதியால் இந்த ஊரங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கடந்த 9 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதுடன், வெசாக் தினத்தையொட்டி சனிக்கிழமை காலை முதல் தற்காலிகமாக அது தளர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீண்டும் இன்று இரவு முதல் அமுலாகவுள்ளது.