கையிருப்பில் இருந்த சமையல் எரிவாயு தீர்ந்ததால் முத்துராஜவெலவில் அமைந்துள்ள எரிவாயு சேமிப்பு முனையத்தின் செயற்பாட்டை 5 நாட்களுக்கு இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நாடளாவிய ரீதியில் எரிவாயு விநியோக நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்படும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிவாயு கொள்வனவுக்காக டொலர் இல்லாமையினால் அதனை உடனடியாக கொள்வனவு செய்ய முடியாத நிலைமை காணப்படுவதாக லிட்ரோ நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக கோரிக்கைகள் விடுக்கப்படுகின்ற போதும், அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும், இதனால் பெரும் நஷ்டத்துடனேயே எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்க வேண்டிய ஏற்பட்டதாக லிட்ரோ நிறுவனத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நாடளாவிய ரீதியில் இன்னும் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருவதாக மக்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்தும் மக்கள் எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு முன்னால் வரிசையில் நின்று வருகின்றனர்.