அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை ஆகியவற்றில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கையெழுத்திட்டுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான யோசனையிலும் அவர் கையெழுத்திட்டுள்ளார்.
நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை ஆகியவற்றுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்தை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் ஐக்கிய மக்கள் சக்தி ஈடுபட்டுள்ளது.
இதன்படி இன்றைய தினத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அதில் கையெழுத்திட்டுள்ளார். அது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் ”மாற்றம் இன்றி நாங்கள் நிறுத்த மாட்டோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை ஆகியவற்றை எதிர்வரும் 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்பார்த்துள்ளனர்.