November 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

367 பொருட்களுக்கான இறக்குமதிக் கட்டுப்பாடு நீடிப்பு!

இலங்கையில் அத்தியாவசியமற்ற 367 பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 9 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அது தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது.

பழங்கள், கடல் உணவுகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள், இலத்திரனியல் உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் தண்ணீர் போத்தல்கள், பியர், வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் சிகரெட்டுகள், வாசனை திரவியங்கள், அழகுசாதன பொருட்களும் இதில் உள்ளடங்கும்.

பொருட்கள் தொடர்பான விபரங்களை இந்த இணைப்பில் பார்வையிடலாம்