
இலங்கையில் ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் பாடசாலை நேரம் ஒரு மணித்தியாலத்தினால் நீடிக்கப்படவுள்ளது.
ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் புதிய கல்வியாண்டு ஆரம்பமாக உள்ளது.
இதன்படி, டிசம்பர் மாதம் 23 ஆம் திகதியுடன் நிறைவடையும் காலப்பகுதிக்குள் பாடசாலை நேரத்தை பூர்த்தி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், பாடசாலை விடுமுறைகள் உள்ளிட்ட பாடசாலை அட்டவணைகள் அதிபர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.