
நாட்டில் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தை இரத்துச் செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
நாட்டில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை தொடர்ந்து, ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் அமுக்குக்கு வரும் வகையில் இலங்கையில் அவசர கால நிலையினை ஜனாதிபதி பிரகடனப்படுத்தியிருந்தார்.
மக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த சட்டத்தை அமுல்படுத்துவதாக, அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கூறியிருந்தார்.
இந்நிலையில் இதற்கு பலரும் எதிர்ப்பு வெளியிட்டதுடன், இதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சி கூறியுள்ளது.
இவ்வாறான நிலையில் அந்த சட்டத்தை ஏப்ரல் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் இரத்து செய்ய
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.