
பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் கொழும்பு, விஜேராம மாவத்தையில் உள்ள வீட்டுக்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.
பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருந்திரலானவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இதனால் அந்த பகுதியில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
“மகிந்த மாமா வெளியேறுங்கள்” என்று கோசமெழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இதேவேளை, பிரதமரின் வீட்டு வளாகத்தில் விசேட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அத்துடன், பாராளுமன்றத்திற்கு முன்னாலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருக்கின்றது.
இந்நிலையில் பத்தரமுல்லை பகுதியில் பசில் ராஜபக்ஷவின் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.