File Photo
இறக்குமதி செய்யப்பட்ட அரிசி, சீனி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 1000 கொள்கலன்கள் கொழும்புத் துறைமுகத்தில் தேங்கிக்கிடப்பதாக அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
டொலர் நெருக்கடியால் அவற்றை விடுவிப்பதில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் அவற்றை விரைவில் விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழ் – சிங்கள புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடு இன்றி அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
அந்த வகையில், இந்தியாவில் இருந்து தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இறக்குமதியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.