எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விலைகளையும் மின்சார கட்டணத்தையும் அதிகரிப்பதற்கு இதுவரையில் தீர்மானிக்கவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ள நிலையில், அதன்போது இவற்றின் விலைகள் மற்றும் கட்டணங்களை தற்போதைய நிலைமையில் அதிகரிக்காது இருக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் 24 மணித்தியாலங்களும் மின்விநியோகத்தை வழமைக்கு கொண்டு வந்த பின்னரே மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ரயில் கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.