தம்மால் அறிவிக்கப்படும் வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்களுக்கு மேலான விலையில் நாணய மாற்று நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என்று இலங்கை மத்திய வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.
சில இடங்களில் நாணய மாற்றுநர்கள் அதிக விலைக்கு அமெரிக்க டொலரை மாற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் நிலையிலேயே மத்திய வங்கி இவ்வாறு அறிவித்துள்ளது.
இதன்படி, உரிமம்பெற்ற வங்கிகள் மற்றும் நாணய மாற்று முகவர்கள் குறித்த அறிவித்தலை மீறினால் அவர்களில் அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படும் என்று மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவ்வாறு அறிவித்தலை மீறி செயற்படுபவர்கள் தொடர்பில் 0112398523, 0112398827 என்ற இலக்கத்திற்கு அறிவிக்க முடியுமென்று மத்திய வங்கி அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது