குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் 5000 ரூபா கொடுப்பனவை வழங்க அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
3.1 மில்லியன் குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவு கிடைக்கும் என்று அமைச்சர் காமினி லோகுகே தெரிவித்துள்ளார்.
இரண்டு மாதங்களுக்கு இந்த கொடுப்பனவை வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.