யுக்ரைனில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதாக வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை ரஷ்யா – யுக்ரைன் விவகாரத்தில் தாம் நடுநிலை கொள்கையிலேயே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே வெளிவிவகார செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமையில் யுக்ரைனில் வசிக்கும் இலங்கையர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் யுக்ரைன் – ரஷ்யா மோதல் நிலைமையால் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கும், தேயிலை ஏற்றுமதிக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்பதுடன், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்றும் ஜயநாத் கொலம்பகே சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான நிலைமையில் எந்த நாட்டின் மீதும் தம்மால் பொருளாதார தடைகளை விதித்து மேலும் நெருக்கடிக்குள் சிக்கிக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.