இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு கொவிட் தடுப்பூசியின் நான்காது டோஸை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கையில் மூன்றாவது தடுப்பூசி செலுத்தப்படுகின்றது. அதனை விரைவில் போட்டுக்கொள்ளுமாறு சுகாதார துறையினர் அறிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவுஸ்திரேலியாவுக்கு உயர்கல்விக்காக சென்ற மாணவர்கள் குழுவொன்றுக்கு விசேட தடுப்பூசியாக நான்காவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் கூறியுள்ளார்.
இதன்படி வெளிநாடு செல்வோருக்காக அவர்கள் செல்லும் நாடுகள் நான்காவது தடுப்பூசியை கோரினால் அதனை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.