இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், அதன் பிரதான நிகழ்வை ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் புறக்கணித்துள்ளனர்.
சுதந்திர தினத்தின் தேசிய நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று காலை கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை இந்நிகழ்வுக்கு முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எவரும் கலந்துகொண்டிருக்கவில்லை.
இதேவேளை, தேசிய சுதந்திர தின நிகழ்வில் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் கலந்துகொண்டிருக்கவில்லை.