இலங்கையின் 74 ஆவது சுதந்திர தின தேசிய நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெற்றது.
“சவால்களை வெற்றிகொண்ட சுபீட்சமான நாளைய வளமான தாய்நாடு” எனும் தொனிப்பொருளில் சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்றது.
கொரோனா தொற்று அச்சுறுத்தல் நிலைமைக்கு மத்தியில் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை பின்பற்றியே, சுதந்திர தின நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் ஆளுநர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், வெளிநாட்டு தூதுவர்கள், இராஜதந்திரிகள் என 1800 பிரமுகர்கள் பங்கேற்றனர்.