பெட்ரோலிய பொருட்கள் கொள்வனவுக்காக இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவியை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்டது.
கொழும்பில் இன்று மாலை இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ மற்றும் இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
ஒப்பந்தத்தில் இலங்கை சார்பாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவும் இந்தியாவின் சார்பில் எக்ஸிம் வங்கியின் பிரதம பொதுமுகாமையாளர் கௌரவ் பண்டாரியும் கைச்சாத்திட்டுள்ளனர்.
A friend in need is a friend indeed!! @IndiaEximBank signed the USD 500 million Line of Credit Agreement for purchase of petroleum products with #SriLanka Treasury today in presence of Hon'ble Finance Minister @RealBRajapaksa and High Commissioner. @MFA_SriLanka pic.twitter.com/QC1iEx6M2H
— India in Sri Lanka (@IndiainSL) February 2, 2022