November 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரச நிறுவனங்களில் செலவு குறைப்பால் 53 பில்லியன் ரூபா சேமிப்பு!

இலங்கையில் அரச நிறுவனங்களில் செலவுகள் குறைக்கப்பட்டமையினால் கடந்த 6 மாதங்களில் 53 பில்லியன் ரூபாவை அரசாங்கம் சேமித்துள்ளதாக நிதி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து கூறும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஊழல், மோசடி, வீணடிப்பு இன்றி சிக்கன திட்டங்களுடன் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களால் பொருளாதாரத்தை பலப்படுத்தியுள்ளோம் என்று நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், இம்முறையும் செலவீனங்களை குறைத்துக்கொண்டு விரயத்தை குறைத்து, உற்பத்திகளை அதிகரித்து பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.