பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான தேவை இல்லை என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ஷ விலக தீர்மானித்துள்ளதாகவும், அந்த இடத்திற்கு பஸில் ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகும் நிலையயிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டின் ஜனநாயக சுதந்திரத்தை பயன்படுத்தி சிலர் அரசாங்கம் தொடர்பில் போலியான தகவல்களை பரப்பி வருவதாகவும், அதனை நம்பும் அளவுக்கு மக்கள் முட்டாள்கள் அல்லவெனவும் பிரதமர் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனநாயக சுதந்திரம் இருக்கின்றது என்பதற்காக அதனை முறையற்ற வகையில் பயன்படுத்தி நடந்துகொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பிரதமர் கூறியுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.