இலங்கையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவை கட்டணங்களை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரையில் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவை கட்டணத்தை 20 வீதத்தால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் பயணிகள் போக்குவரத்து பஸ் கட்டணங்கள் 17 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.