Photo: Twitter/englandcricket
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 498 ஓட்டங்களை குவித்து புதிய உலக சாதனையை நிலைநாட்டியுள்ளது.
நெதர்லாந்து அணியுடனான முதலாவது ஒருநாள் போட்டியிலேயே இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்து – நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது.
நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீன் நகரில் இந்தப் போட்டி நடைபெறுகின்றது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற நெதர்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்த நிலையில், இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாடியது.
இதன்படி, 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்கள் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 498 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இங்கிலாந்து அணி சார்பில் ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 162 ஓட்டங்களையும், டேவிட் மாலன் 122 மற்றும் பில் சால்ட் 122 ஓட்டங்களையும் பெற்று அசத்தினர்.
இதற்கமைய இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களை பெற்ற அணியாக சாதனையை நிலைநாட்டியுள்ளது.
Incredible.
We break our own World Record with a score of 4️⃣9️⃣8️⃣
🇳🇱 #NEDvENG 🏴 pic.twitter.com/oWtcfh2nsv
— England Cricket (@englandcricket) June 17, 2022
இதற்கு முன்னர் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 481 ஓட்டங்களை பெற்று உலக சாதனையை நிலைநாட்டியிருந்தது.
இந்நிலையில் மீண்டும் அதிகூடிய ஓட்டங்களை பெற்று அந்த சாதனையை இங்கிலாந்து அணியே புதுப்பித்துக்கொண்டுள்ளது.