இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம், குஷிநகர் மாவட்டத்தில் திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த 13 பெண்கள் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளனர்.
நாராங்கியா என்னும் கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற பெண்கள் மற்றும் சிறுமிகள் பலர் அந்தப் பகுதியில் சீமெந்தால் மூடப்பட்ட கிணறொன்றின் மேற்கூரை மீது அமர்ந்திருந்த போது இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாரம் தாங்காமல் கிணற்றின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளதாகவும் இதில் கிணற்றுக்குள் மூழ்கி 13 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை கிராம மக்களின் உதவியுடன் 11 பெண்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.