May 14, 2025 3:48:31

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இந்தியாவும், சீனாவும் பரஸ்பர ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டுமே தவிர மோதலில் ஈடுபடக் கூடாது’; இந்தியாவுக்கான சீனத் தூதுவர்

(Photo: Sun Weidong/Twitter)

கருத்து வேறுபாடுகளை தீர்க்க இந்தியாவும் சீனாவும் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் என இந்தியாவுக்கான சீன தூதுவர் சன் வீடோங் தெரிவித்துள்ளார்.

அதேநேரம்,பேச்சுவார்த்தைகள் மூலமாகவே இருநாட்டு எல்லைப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் சீனா நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இளம் தலைவர்கள் மத்தியில், சீனத் தூதர் நேற்று முன்தினம் (08) இணைய வழியில் கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கருத்து வேறுபாடு ஏற்படுவது இயல்பு எனக் கூறியுள்ள சீன தூதர், எல்லைப் பிரச்சினை என்பது வரலாற்று காலம் தொட்டு இருக்கக் கூடியதொன்று எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவும் ,சீனாவும் பரஸ்பர ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும், மோதலில் ஈடுபடக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதேநேரம், நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் வளர்ச்சிக்கான நலன்களை பாதுகாப்பதில் சீனா உறுதியாக இருப்பதாகவும் இந்தியாவும், சீனாவும் ஒருவருக்கொருவர் மதித்து, சமமாக நடந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவும் சீனாவும் பரஸ்பரம் ஒத்துழைக்க வேண்டும் எனவும் மோதலில் ஈடுபடக் கூடாது எனவும் பொருளாதாரத்தை புதுப்பிப்பதில் தற்போது கவனம் செலுத்த வேண்டும் எனவும் சீன தூதுவர் வலியுறுத்தியிருக்கிறார்.

இதேவேளை இந்திய, சீன இராணுவம் இடையே கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதல் காரணமாக இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது.

எல்லையில் இருந்து சீனப் படைகள் விலக்கிக் கொள்ளப்படாத வரை சீனாவுடன் வழக்கமான உறவை பேண முடியாது என இந்தியா கூறி வரும் நிலையிலேயே, சீனத் தூதுவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.